• Download mobile app
20 Oct 2025, MondayEdition - 3540
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தி சம்ஹிதா அகாடமி பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா – ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்

September 27, 2025 தண்டோரா குழு

கோயம்புத்தூர் மலுமிச்சம்பட்டி தி சம்ஹிதா அகாடமி பள்ளியில் நடப்பு கல்வியாண்டுக்கான விளையாட்டு விழா இன்று பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.பள்ளி முதல்வர் புஷ்பஜா கண்ணதாசன் தேசிய கொடியை ஏற்றி தொடங்கி வைத்தார்.

பள்ளி மாணவர் தலைவர் வே.நிதி வரவேற்புரை ஆற்றினார்.மாணவர்கள் வாயு,அக்னி பிருத்வி மற்றும் ஜல் என நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, இறைவழிபாட்டுடன் விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து நான்கு குழுக்களின் அணிவகுப்பு மரியாதையை பள்ளி முதல்வர் ஏற்றுக்கொண்டு,ஒலிம்பிக் விளக்கை ஏற்றினார்.

அதனைத் தொடர்ந்து மார்ச் பாஸ்ட், ஒலிம்பிக் தீபம் ஏற்றுதல், உறுதிமொழி எடுத்தல், மழலையர் நடனம், விசிறி ட்ரில், பந்து ட்ரில்,யோகா மற்றும் டேக்வாண்டோ, ஏரோபிக் நடனம் ஆகியவை நடைபெற்றன. பள்ளியில் வருடாந்திர விளையாட்டு தினத்தையொட்டி வளையம் தாண்டுதல், தடை ஓட்டம், ஜிக்ஜாக் ஓட்டம், வண்ண பந்து சேகரிப்பு, கூம்புகளை சேகரித்தல், 200 மீ ஓட்டம், 400 மீ ஓட்டம், ரிலே போன்ற பல போட்டிகள் நடத்தப்பட்டன.

மாணவர்கள் அந்தந்த குழு உறுப்பினர்களை உற்சாகப்படுத்தினர். அவர்களின் நிகழ்வுகளில் பெற்றோர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு மகிழ்ந்தனர். உடற்கல்வி ஆசிரியர்கள் ஹரிதா மற்றும் காந்திநாதன் பள்ளி நிர்வாகத்தின் உதவியுடன் மாணவர்களை ஒருங்கிணைத்து அவர்களின் திறமையை ஊக்குவித்து, சிறப்பாக போட்டியை நடத்தினார்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் பரிசு வழங்கி கௌரவித்தார்.

விழாவில் பள்ளி முதல்வர் பேசுகையில்,

மாணவர்களின் வாழ்க்கையில் விளையாட்டின் முக்கியத்துவம் மற்றும் இணை பாடத்திட்ட செயல்பாடுகளின் மதிப்புகள் குறித்து எடுத்துரைத்தார் . விளையாட்டுப் போட்டிகளில் நான்கு குழுக்களுக்கும் இடையே நடைபெற்ற போட்டிகளுக்கு வெற்றி புள்ளிகள் வழங்கப்பட்டிருந்தது. அதில் ப்ரித்வி குழு அதிக புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து சுழற் கோப்பையை தட்டி சென்றனர்.

பள்ளி முதல்வர் சுழற்கோப்பை வழங்கி கௌரவித்தார். பள்ளி விளையாட்டுத் தலைவர் த அகில் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

மேலும் படிக்க