• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திரூப்பூர் முதலிபாளையத்தில் கடையடைப்பு

April 27, 2017 தண்டோரா குழு

திருப்பூர் அருகே மதுப்பானக்கடையை அடித்து நொறுக்கிய 200 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதை கண்டித்து இன்று அப்பகுதியில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள முதலிபாளையம் பகுதியில் நேற்று மதுப்பானக் கடையை மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது அக்கடையின் பார் பொதுமக்களால் அடித்து நொறுக்கப்பட்டது.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் 500 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். அதில் 200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 24 பேர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுவிக்கக்கோரியும், வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்தியும், 2௦௦ பேர் வழக்கு பதிவு செய்ததை கண்டித்தும் முதலிபாளையம் பகுதியில் இன்று முழு கடை அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க