July 11, 2017
தண்டோரா குழு
திருடப்படும் கைபேசிகளை யாரும் பயன்படுத்த முடியாத நிலையை உருவாக்க சி.ஐ.இ.ஆர். செயலியை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
மக்களிடமிருந்து திருடப்படும் கைபேசிகளை மற்றவர்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு மத்திய அரசு ஒரு செயலியை உருவாக்கியுள்ளது. இந்த செயலிக்கு சி.ஐ.இ.ஆர். (Central Equipment Identity Register -CIER) என்று பெயர்.
திருடப்பட்ட கைபேசி அல்லது காணாமல் போன கைபேசியின் சிம் கார்டை மாற்றினாலோ அல்லது IMEI எண்ணை மாற்றினாலோ, இந்த செயலி, அந்த கைபேசியின் அனைத்து சேவைகளையும் முடக்கிவிடும்.
இந்த செயலி தற்போது சோதனையில் உள்ளது. இந்த சோதனை வெற்றி பெற்றால் அனைத்து கைபேசியிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு கைபேசியிலும் IMEI என்னும் தனித்துவமான எண் உள்ளது கைபேசியில் அந்த என்னை மாற்றவோ அல்லது திருத்தவோ முயன்றால், மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தொலைதொடர்பு துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருடப்பட்ட கைப்பேசியை மற்றவர்கள் பயன்படுத்த முடியாத நிலையை உருவாக்க CIER உருவாக்கும். நுகர்வோர் ஆர்வம் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு உதவும் விதமாக இந்த திட்டம் உள்ளது என்று பி.எஸ்.என்.எல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.