• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திராவிட கட்சிகள் பற்றி பேச கமலுக்கு எந்த அருகதையும் இல்லை – அமைச்சர் கடம்பூர் ராஜூ

February 9, 2019 தண்டோரா குழு

திராவிட கட்சிகள் பற்றி பேச கமலுக்கு எந்த அருகதையும் இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடும்.தி.மு.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி கிடையாது. எங்கள் கையில் கறை படிந்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம் என கூறினார்.
இந்நிலையில், அமைச்சர் கடம்பூர் ராஜு தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த போது கமல்ஹாசனை கடுமையாக விமர்சனம் செய்தார்.

அப்போது பேசிய அவர்,

புதிய திரைப்படங்கள் இணையதளத்தில் வெளியாவது விரைவில் முற்றிலும் தடுக்கப்படும். திரைத்துறையினர் இதற்காக ஒருங்கிணைந்து செயல்பட்டால், இதனை ஒரே நாளில் கட்டுப்படுத்த முடியும். தான் நடித்த திரைப்படம் தாமதமாக வெளியாவதை கூட தாங்கி கொள்ள முடியாமல், நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று கூறியவர் கமல்ஹாசன். எனவே இதன் மூலம் இந்த தேர்தல் முடிவுகலில் தெரியும் யார் நாட்டை விட்டு ஓடப்போகிறார்கள். யார் கட்சி இல்லாமல் போகப்போகிறது என்று தேர்தல் முடிவுகளின் மூலம் மக்கள் தகுந்த படம் கற்பிப்பார்கள். திராவிட கட்சிகள் பற்றி பேச அவருக்கு எந்த அருகதையும் இல்லை” என்று அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க