• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தானத்தில் சிறந்த தானம் உறுப்பு தானம் என்று உணர்த்திய மாமனிதர்.

April 26, 2016 தண்டோரா குழு

தானத்தில் சிறந்த தானம் எதுவாக இருக்க முடியும்? சற்று சிந்தித்து பார்த்தால் அது உடலுறுப்பு தானம் தான் என்பது புரியும்.

அதனை எடுத்துக்காட்டும் வகையில் பிரேசிலை சேர்ந்த பணக்காரர் ஒருவர் தனது விலையுயர்ந்த பெண்ட்லே என்னும் சொகுசு காரை ஒரு குறிப்பிட்ட நாளில் மண்ணில் புதைக்கப் போவதாக விளம்பரப் படுத்தினார்.

அதற்குக் காரணம் என்ன வென்று கேட்ட போது, தான் இறந்த பின் இந்தக் காரை யாரும் பயன்படுத்தக்கூடாது எனவும், இறந்த பின் தானே இதைப் பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்தச் செய்தியை அறிந்த பொதுமக்கள், பத்திரிகைக்காரர்கள் மற்றும் உலகில் உள்ள தலை சிறந்த மனிதர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்ந்தனர். அது மட்டுமல்லாது அனைவரும் அவரைப் பரிகாசம் செய்தனர்.

மக்கள் அனைவரும் அந்த நாள் வரும் வரை அவர் சொன்னதை செய்வாரா என்று பார்க்க ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர். அந்தப் பணக்காரர் கூறியதுபோல் அவர் சொன்ன தேதி வந்தது.

அந்தப் பணக்காரர் கூறியது போலவே அவர் கூறிய நாளில் அவரது வீட்டின் முன்பு பெரிய குழி ஒன்று வெட்டி வைக்கப்பட்டிருந்தது. அதனால் அங்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.

பொதுமக்கள், செய்தியாளர்கள் என அனைவரும் அங்குத் திரண்டனர். அவர் கூறியது போல் அவரது விலையுயர்ந்த சொகுசு காரை அவரது வீட்டின் முன்பு வெட்டப்பட்ட குழியின் உள்ளே இறக்க உத்தரவிட்டார்.

அப்போது அங்குக் கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் செய்தியாளர்கள் அனைவரும் இவருக்கு என்ன பைத்தியமா எனக் கேள்வி எழுப்பினர். அதில் சிலர் ஆக்ரோஷமான முறையில் கத்தினர்.

இப்படி யாருக்கும் பயன்படாத வகையில் இந்தக் காரை புதைக்கிறீர்களே அதற்குப் பதிலாக இந்தக் காரை தானம் என்ற முறையில் மற்றவர்களுக்குக் கொடுத்து விடலாமே என்று அவரிடம் கூறினர்.

அதற்கு அவர், இந்த விலையுயர்ந்த காரை யாருக்காவது தானம் செய்யலாமே என்று கூறுகிறீர்களே, உங்களில் எத்தனைப் பேர் விலையில்லா உங்களுடைய உடல் உறுப்புகளை தானம் செய்தீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். மக்கள் அனைவரும் திகைத்துப் போயினர்.

பின்னர் நீங்கள் அனைவரும் இறந்த பிறகு உங்களது உடல் உறுப்புகள் வீணாக மண்ணோடு மக்கிப் போகிறது. அதற்குப் பதிலாக உங்கள் உடல் உறுப்புகளை மக்கவிடாமல் மற்றவர்களது உடலுக்கு உயிர் தரும் வகையில் உறுப்புகளை தானம் செய்து பயன்படுத்த வேண்டும் எனக் கூறினார்.

தற்போதைய நிலவரத்தின்படி இந்தியாவில் மட்டும் வருடத்திற்கு பல்லாயிரக்கணக்கானோர் கண், இதயம், கல்லீரல், தோல், போன்ற உறுப்புகளை யாராவது தானம் தருவார்களா என காத்துக் கொண்டிருக்கின்றனர்.

எனவே அந்த மாமனிதர் கூறியது போல், அனைவரும் தங்களது உடலை தானம் செய்து பல உயிர்களுக்கு வாழ்வு கொடுக்கவேண்டும்.

மேலும் படிக்க