• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு

February 8, 2019 தண்டோரா குழு

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் 4 நாட்கள் நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் 2019 -20-ம் நிதி ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தல் காரணமாக முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின், சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் வரும் 11 முதல் 14 வரை சட்டசபை நடத்துவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. பட்ஜெட் மீதான விவாதத்திற்கு 14-ம் தேதி நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் பதிலளிப்பார் என்று அவர் தெரிவித்தார்.

கூட்டத்தொடர் நடைபெறும் நான்கு நாட்களும் கேள்வி நேரம் இருக்கும் என்று சபாநாயகர் தனபால் கூறியுள்ளார்.

மேலும் படிக்க