• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக எல்லையான வாளையாறில் தமிழக தொழிலாளர்கள் 400 பேர் காத்திருப்பு

March 23, 2020 தண்டோரா குழு

கேரளாவில் வசிக்கும் பிற மாநிலத்தவர்கள் சொந்த ஊருக்கு செல்ல அறிவுறுத்தப்பட்ட நிலையில் தமிழக எல்லையான வாளையாறில் தமிழக தொழிலாளர்கள் 400 பேர் காத்திருக்கின்றனர்.

கேரளாவில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்த தமிழக தொழிலாளர்கள் 400 பேர் கேரளா, தமிழக எல்லையான வாளையாறில் 400 பேர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.கொரோனா அச்சத்தால் கேரளா அரசு பிற மாநிலங்களில் இருந்து வந்து பணிபுரிபவர்கள் அவர்கள் சொந்த்த ஊருக்கு செல்லலாம் என் அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து கிடைக்கும் வாகனங்களில் கோவை எல்லைக்கு வந்த தொழிலாளர்கள் கடும் சோதனைக்கு பின் , அவர்களது ஆதார் கார்டுகள் சரிபார்க்கப்பட்டு கோவையில் நுழைய அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் கேரளாவைச்சேர்ந்த பெண் ஒருவர் மகப்பேறு சிகிச்சைக்காக கேரளா எல்லைக்கு வந்துள்ளார். இதனையடுத்து அவரது சிகிச்சை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு,காய்ச்சல் பரிசோதனை செய்த சுகாதாரத்துறையினர், அவரை மகப்பேறு சிகிச்சைக்காக 108 ஆம்புலென்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தனர்.

இந்நிலையில் அத்தியாவசிய தேவைகள் மற்றும், அவசர சிகிச்சைக்கு மட்டுமே கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தமிழக எல்லைகளுக்கு வரும் கேரளா வாகனங்கள் மீண்டும் கேரளாவிற்கு திருப்பி அனுப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க