• Download mobile app
08 Sep 2026, TuesdayEdition - 3863
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக ஆளுநர் ரவியின் படத்தை கிழித்தெறிந்து இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

February 4, 2022 தண்டோரா குழு

இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக தமிழக ஆளுநர் செயல்படுவதாக குற்றம் சாட்டி ஆளுநர் ரவியின் படத்திலிருந்து இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழகத்தின் அனைத்து அரசில் இயக்கங்கள் மற்றும் இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகிறது.கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு தமிழக சட்டமன்றத்தில் திமுக தலைமையீலான அரசு நீட் விலக்கு மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது.கடந்த ஐந்து மாதங்களாக இம் மசோதா குறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி விட்டு தற்போது தமிழக அரசுக்கு நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.இது ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் மாணவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழக ஆளுநரின் இச்செயலை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் வெடித்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இந்திய மாணவர் சங்கத்தினர் கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனர். இதனைத் தொடர்ந்து தமிழக ஆளுநர் நடவடிக்கையை கண்டித்தும்,ஒன்றிய அரசு உடனடியாக தமிழக ஆளுநர் ரவியை திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பி ஊர்வலமாக வந்தனர். இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வி.மாரியப்பன் தலைமையில் ஊர்வலமாக வந்தவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்ய முயன்றனர்.

இதனைத்தொடர்ந்து தமிழக மாணவர்களுக்கு ஆளுநர் ரவி மிகப்பெரிய துரோகம் இழைத்ததாக குற்றம்சாட்டி தமிழக ஆளுநர் ரவியின் உருவப்படத்தை கிழித்தெறிந்தனர். இதனால் சிறிது நேரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.இதனையடுத்து இந்திய மாணவர் சங்கத்தின் மாநில செயலாளர் வி.மாரியப்பன்,மாவட்ட செயலாளர் தினேஷ்ராஜா உள்ளிட்ட 30″க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் படிக்க