July 10, 2017
தண்டோரா குழு
தமிழக அரசு திருநங்கைகளுக்காக புதிய அரசாணை ஒன்றை பிறப்பித்துள்ளது.தமிழக நிதித்துறை திருநங்கைகளுக்காக புதிய அரசாணை ஒன்றை பிறப்பித்துள்ளது.
இந்த அரசாணையின்படி, அரசு ஊழியர்களின் திருநங்கைகளாயிருக்கும் குழந்தைகள் இனி, பெண் குழந்தைகளாகக் கருதப்படுவர்.அரசு ஊழியர்கள் பணியில் இருந்து மரணமடைந்தால் அவர்களுக்குப் பெண் குழந்தைகளுக்கு வழங்கும் சலுகைகள் வழங்கப்படும். அக்குழந்தைகள் 25 வயதுவரை குடும்பஓய்வூதியம்பெற்றுக்கொள்ளலாம்.இந்த அரசாணை திருநங்கைகளுக்கு கிடைத்த ஒரு அங்கீகாரமாக கருதப்படுகிறது.