• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து ஏப்ரல் 24ம் தேதிக்குள் முடிவு – தேர்தல் ஆணையம்

January 22, 2019 தண்டோரா குழு

தமிழகத்தில் காலியாகவுள்ள 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து வரும் 24 ஆம் தேதிக்குள் முடிவெடுக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

எம்.எல்.ஏ.க்கள் தகுதியிழப்பு செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று திருமங்கலத்தைச் சேர்ந்த தாமோதிரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார் இவ்வழக்கு தொடர்பான விசாரணையின் போது நீதிபதிகள், 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இடைத்தேர்தல் எப்போது நடத்தப்படும்? என்பதை இந்த நீதிமன்றம் அறிய விரும்புகிறது” என்றனர்.

இதையடுத்து, இந்த வழக்கு குறித்து இந்திய தலைமை தேர்தல் கமிஷன், தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ஆகியோர் பதில் அளிக்கும்படி, நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 22-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் மேல்முறையீடு செய்ய ஏப்ரல் வரை அவகாசம் உள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியுள்ளார். மேலும், தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து ஏப்ரல் 24-க்குள் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க