• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் மேலும் 72 பேருக்கு கொரோனா – உயிரிழப்பு 22 ஆக உயர்வு

April 24, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் மேலும் 72 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் இன்று மேலும் 72 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதில் அதிகபட்சமாக சென்னையில் 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன் மூலமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,683 ஆக இருந்த நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை 1,755 ஆக அதிகரித்துள்ளது.இன்று குணமடைந்தோர் எண்ணிக்கை 114. மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 886. இன்று இருவர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 72,403 கரோனா தொற்று மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இன்று மட்டும் 6,426 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 65,834 நபர்களுக்கும் இன்று மட்டும் 5,882 பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.
தமிழகத்தில் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 25,503. மேலும், 19 பேர் அரசுக் கண்காணிப்பில் உள்ளனர். இதில் 28 நாள்கள் கண்காணிப்பு முடித்தவர்கள் 87,159. தமிழகத்தில் 23 அரசு ஆய்வகங்கள், 11 தனியார் ஆய்வகங்கள் என 34 ஆய்வகங்கள் உள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க