• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தன்னை குடும்பத்தோடு சேர்த்து கருணை கொலை செய்து விடுங்கள் ஆட்சியரிடம் மனு

February 27, 2023 தண்டோரா குழு

தனது உயில் சார்ந்த விவசாய பூமி சொத்திற்கும், தனது உயிருக்கும் பாதுகாப்பு ஏற்படுத்தி தராவிட்டால் தன்னை குடும்பத்தோடு சேர்த்து கருணை கொலை செய்து விடுங்கள் எனக் கோரி காளியம்மாள் என்பவர்‌ மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு நிலவியது.

பேரூர் நரசி புரத்தைச் சேர்ந்த காளியம்மாள் என்பவர் ஏழு ஆண்டுகளாக அவரது உயில் சார்ந்த விவசாய பூமி சொத்து மற்றும் உயிருக்கு வழங்க கோரி பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்ததாக கூறப்படுகிறது. மேலும் தனது விவசாய பூமி சொத்தை கூட்டு சதி செய்து மோசடி செய்த நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து வழக்குப்பதிய கூறி தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், ஆளுநர் உள்ளிட்ட பலருக்கு அனுப்பி வைத்தும் எவ்வித பலனும் இல்லாததால் தன்னை குடும்பத்துடன் கருணை கொலை செய்ய உத்தரவிட வேண்டி அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு புகார் மனு அளிக்க வந்திருந்தார்.

சங்கு ஊதி கருணை கொலை செய்ய வேண்டி அவர் கோரிக்கை மனு கொண்டு வந்திருந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் படிக்க