• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தங்க மகன் மாரியப்பன் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன

April 13, 2017 தண்டோரா குழு

தமிழகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு பத்ம விருதுகளை இந்திய குடியரசுத் தலைவர் பிராணப் முகர்ஜி வழங்கினார். பாரலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன், பத்திரிகையாளர் சோ உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.

இந்தியாவின் உயரிய விருதான பத்ம விருதுகளை ஆண்டுதோறும் மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் தில்லியில் குடியரசுத் தலைவரால் இன்று வழங்கப்பட்டது.

7 பேருக்கு பத்ம பூஷண், 75 பேருக்கு பத்மஸ்ரீ என மொத்தம் 89 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு பத்ம விருதுகளை இந்திய குடியரசுத் தலைவர் வழங்கினார்.

பாரலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

அதே போல் திரைப்பட பாடகர் யேசுதாசு, ஜக்கி வாசுதேவ், பத்திரிகையாளர் சோ ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. தீபா கர்மாகர், சாக்‌ஷி மாலிக் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

தில்லியில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க