• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டிடிவி தினகரன் ரூ.122 கோடி செலவு செய்துள்ளதாக புகார்

April 5, 2017 தண்டோரா குழு

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க அம்மா கட்சியை சார்ந்த டி.டி.வி. தினகரன் ரூ.122 கோடி செலவு செய்துள்ளார் என்று அ.தி.மு.க புரட்சி தலைவி அம்மா கட்சினர் புகார் கூறியுள்ளனர்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க அம்மா கட்சியினர் பணபட்டுவாட செய்வதாக தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் அ.தி.மு.க புரட்சி தலைவி அம்மா கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி ஆகியோர் புகார் அளித்தனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறுகையில்

“சென்னை ஆர்.கே.நகரில் ஆளும் கட்சிக்கும் தேர்தல் ஆணையதிற்கும் இடையில் தான் போட்டி நடக்கிறது. தொகுதியில் பணப்படுவாடா விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தோல்வி அடைந்து விட்டது.

பணப்பட்டுவாடா செய்பவர்களை காவல்துறையினர் கைது செய்து பாதிவழியில் விட்டுவிடுகிறார்கள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் ரூ.122 கோடியை செலவு செய்துள்ளார்.”

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் படிக்க