• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

”டிஜிட்டல் நில ஆவண டேட்டா சென்டர்” துவக்கவேண்டும் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் வலியுறுத்தல்

April 28, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் இன்று காலை நடந்தது. மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமை தாங்கினார். இதில், பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு, தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.

பின்னர், அவசரமாக தீர்வுகாணப்பட வேண்டிய விஷயங்கள் குறித்தும் பேசினர். இக்கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியம் செம்மாண்டம்பாளையம் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட வண்ணத்தங்கரை, அனந்தாபுரம், மூனுகட்டிபாளையம், தோதபாளையம் ஆகிய கிராமங்களில் முட்புதர்கள் மற்றும் நீர்வழிப்பாதைகளில் மான்கள் கூட்டம் கூட்டமாக முகாமிட்டு, வேளாண் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கின்றன.

எனவே, வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, மான்களை பிடித்து வனப்பகுதியில் விடவேண்டும். கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதன்காரணமாக, மேட்டுப்பாளையம், லிங்காபுரம், சிறுமுகை, தேக்கம்பட்டி, வெள்ளியங்காடு, காரமடை, சூலூர், தொண்டாமுத்தூர், அன்னூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல லட்சம் வாழைகள் முறிந்து நாசமாகிவிட்டன. விவசாயிகள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

எனவே, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு விரைவாக வழங்க வேண்டும்.தமிழ்நாட்டில் நில ஆவணங்கள் கடந்த 1858-ம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது. பழைய நில ஆவணங்களின் நகல்களை பெற விவசாயிகள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். இதை சரிசெய்ய, பழைய நில ஆவணங்கள் அனைத்தையும் ஸ்கேன் செய்து, இணையதளத்தில் வெளியிடுமாறு தமிழ்நாடு தகவல் ஆணையம் 2020-ம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால், இதுவரை இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

மேலும், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின்கீழ், அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம் ஆகியவற்றில், ”டிஜிட்டல் லேண்ட் ரெக்கார்டு டேட்டா சென்டர்” உருவாக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவும் அமைக்கப்படவில்ைல. இதனால், விவசாயிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் நில ஆவணங்களை பெற முடியாமல் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே, பழைய நில ஆவணங்கள் அனைத்தையும் ஸ்கேன் செய்து, டிஜிட்டல் லேண்ட் ரெக்கார்டு டேட்டா சென்டர் அமைக்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

மேலும் படிக்க