• Download mobile app
05 Dec 2025, FridayEdition - 3586
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜோய்ஆலுக்காஸ் “பிரில்லியன்ஸ் டையமண்ட் ஜூவல்லரி ஷோ” டிசம்பர் 5 முதல் 21 வரை நடைபெறுகிறது

December 5, 2025 தண்டோரா குழு

உலகின் ஃபேவரிட் ஜுவல்லர் ஜோய்ஆலுக்காஸ், தமிழ்நாட்டை பிரகாசிகாச் செய்யும் ‘பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜூவல்லரி ஷோ’-வை, டிசம்பர் 5 முதல் தனது கோவை கிராஸ்கட்ரோடு ஷோரூமில் நடத்துகிறது. மிகுந்த எதிர்பார்ப்புடன் நடைபெறும் இந்த கண்காட்சி, வைர நகைகளின் தலைசிறந்த கலைநயம், அழகியல் மற்றும் புதுமையை ஒருங்கிணைக்கிறது.

மேலும் இதனை மறக்க முடியாத இனிய அனுபவமாக வாடிக்கையாளர்களுக்கு அளித்திட ஜோய்ஆலுக்காஸ் விசேஷமாக இந்த கண்காட்சியை வடிவமைத்துள்ளது.

கவர்ந்திழுக்கும் மணமகளுக்கான வைர நகை செட் முதல், தினசரி அணிவதற்கான நவீன வைர நகைகள் வரை இந்த கண்காட்சியில் இடம்பெறுகிறது. பாரம்பரியத்தையும், நவீன வடிவமைப்பையும் ஒன்றிணைக்கும் சிறப்பு கலெக்ஷன்களும் இடம்பெற்றுள்ளன. இந்த கண்காட்சியின் ஒவ்வொரு வடிவமும் ஒரு கலைப் படைப்பு; இது கண்காட்சி காலத்திற்குள் மட்டுமே கிடைக்கும் பிரத்தியேக நகைகள்.

ஜோய்ஆலுக்காஸ் குழுமத்தின் சேர்மன் Dr. ஜோய் ஆலுக்காஸ் இது குறித்து கூறுகையில்,

“பிரில்லியன்ஸ் வைர நகை கண்காட்சி வைரங்களின் வசீகரத்திற்கும் அந்த வசீகரத்தின் வடிவமைப்பிற்கும் ஆபரண வல்லுனராக நாங்கள் செலுத்தும் மரியாதை மற்றும் கலை ஆர்வத்திற்கான ஓர் அடையாளம். கோயம்புத்தூர் மாநகரம் எங்கள் பயணத்தில் எப்போதும் ஒரு தனித்துவமான இடத்தை பெற்றுள்ளது, அதற்காகவே தற்போது விழாக்கால நேரங்களில் நடைபெறும் இந்த கண்காட்சியை மிகவும் விசேஷமாக வடிவமைத்திருக்கிறோம்.

வாடிக்கையாளர்கள் அழகு, தனித்துவம் மற்றும் கலைநயம் ஆகிய அனைத்தையும் மிகத் துல்லியமாக வெளிப்படுத்தும் ஆபரணங்களை தலைசிறந்த வடிவமைப்புகளை இந்த கண்காட்சியில் தேர்ந்தெடுக்கலாம்” என்றார்.

மேலும், இந்த கண்காட்சி காலத்தில் ₹1 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பில் வைர நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச தங்க நாணயம் வழங்கப்படுகிறது. ‘பிரில்லியன்ஸ் டையமண்ட் ஜூவல்லரி ஷோ’, டிசம்பர் 21, 2025 வரை ஜோயலுக்காஸ் ஷோரூம், கிராஸ் கட் ரோடு, கோயம்புத்தூரில் மட்டுமே நடைபெறுகிறது. அழகு, தரம் மற்றும் காலம் வென்ற கலைநயத்தை கொண்ட வைர நகைகளின் அழகிய உலகத்தை அனுபவிக்க அனைவரையும் ஜோயலுக்காஸ் அன்புடன் அழைக்கிறது.

மேலும் படிக்க