• Download mobile app
20 Apr 2026, MondayEdition - 3722
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெ.,வின் சிகிச்சை புகைப்படங்கள் வெளியிடப்படும் – புகழேந்தி

May 3, 2017 தண்டோரா குழு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிகிச்சை புகைப்படங்கள் விரைவில் வெளியிடப்படும். அவை வெளியானால் எல்லா உண்மையும் வெளிச்சத்துக்கு வரும் என்று கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் புகழேந்தி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

“மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சையே அளிக்கப்பட்டது. மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த போது அருகில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் இப்போது சி.பி.ஐ. விசாரணை தேவை என்கிறார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியிடப்படும். ஜெயலலிதாவின் புகைப்படங்கள் வெளியிட அனுமதிக்காக காத்திருக்கிறோம். பொறுத்திருந்து பாருங்கள். அந்தப் புகைப்படங்கள் வெளியானால் எல்லா உண்மையும் வெளிச்சத்துக்கு வரும். அப்போது பலரது முகத்திரை கிழியும்” என்றார் புகழேந்தி.

அ.தி.மு.க.,(அம்மா) அணியின் துணை பொதுச் செயலர் தினகரனுக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் மதுரையில் இன்று அ.தி.மு.க., தொண்டர் ஒழுங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் புகழேந்தி கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க