• Download mobile app
15 Dec 2025, MondayEdition - 3596
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெர்மனியில் பணத்தட்டுப்பாட்டால் இந்திய வீரர்கள் அவதி

July 12, 2017 தண்டோரா குழு

இந்தியாவின் பாரா ஒலிம்பிக் குழு அனுப்பிய பணம் சரியான நேரத்தில் சென்று அடையாதததால் பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்துக்கொண்ட வீராங்கனை அவதியுற்றார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூரை சேர்ந்த காஞ்சனமாலா பாண்டே பிறவியிலிருந்து கண்பார்வையை இழந்தவர். ஆனால், நீச்சலில் திறமை பெற்றவர். ஜெர்மனியில் ஜூலை 3ம் தேதி முதல் 9ம் தேதி வரை பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் கலந்துக்கொள்ள ஜெர்மனி சென்றார் காஞ்சனமாலா.ஆனால் எதிர்பாராத விதமாக போட்டியில், கலந்துக்கொண்ட வீரர்களுக்கு அனுப்பிய பணம் சரியான நேரத்தில் சென்று அடையவில்லை. இதனால், காஞ்சனமாலா அறிமுகமில்லாத நாட்டில் கடன் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தங்கும் இடத்திற்கும் உணவிற்கும் அவரே செலவு செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இது குறித்து காஞ்சனமாலா கூறுகையில்,

“இது போன்ற ஒரு பிரச்சனையை நான் சந்திப்பேன் என்று நினைத்து பார்க்கவில்லை. இந்த போட்டியில் கலந்துக்கொள்ள 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கினேன்.நான் செலவு செய்த தொகையை அரசு திருப்பி தருமா? என்பதை குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. ஹோட்டலில் தங்குவதற்கு (844 பவுண்ட்) 7௦,௦௦௦ ஆயிரம் ரூபாயும் உணவிற்கு 4௦,௦௦௦ (482 பவுண்ட்) செலவு செய்தேன்” என்று கூறினார்.

இந்த போராட்டத்தின் நடுவில், இந்த போட்டியில் கலந்துக்கொண்ட காஞ்சனமாலா மற்றும் சுயாஷ் ஜாதவ் வெள்ளி பாதகத்தை பெற்று, உலக சாம்பியன்ஷிபிற்கு தகுதி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க