• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களை அளிக்கத் தயார் – அப்பல்லோ மருத்துவமனை

January 9, 2017 தண்டோரா குழு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த விவரங்களை அளிக்கத் தயார் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடந்த 2015 செப்டம்பர் 23 ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்பல்லோவில் தொடர்ந்து 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அவர் டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார்.

ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது குறித்தும் அவரது மரணம் குறித்தும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.

இதையெடுத்து, சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஜோசப் என்பவர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, வழக்கு தொடுத்தார். இது தொடர்பாக உயர் நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளுக்கும், சென்னை அப்பல்லோ நிர்வாகத்துக்கும் கடந்த டிசம்பர் 29-ம் தேதி நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல் அமர்வு முன்பு திங்களன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் ஆஜாரான மூத்த வழக்குரைஞர் பி.எஸ். ராமன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த விவரத்தை சீலிடப்பட்ட உறையில் அளிக்கத் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

எனினும், மத்திய, மாநில அரசுகள் தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப் பட்டதால் வழக்கு விசாரணை பிப்ரவரி 23-ம் தேதிக்கு ஒத்திவைத்து தலைமை நீதிபதி உத்தரவிட்டார். மேலும், மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் பதிலைப் பொறுத்து மருத்துவமனையின் அறிக்கையை வெளிப்படையாக வெளியிடுவது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.

மேலும் படிக்க