• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜிஎஸ்டி டிப்ளமோ படிப்பு விரைவில் அறிமுகம்

July 15, 2017 தண்டோரா குழு

தில்லி பல்கலைக்கழகத்தில் ஜிஎஸ்டி குறித்த டிப்ளமோ படிப்பையும், சைபர் சட்டம் பாடத்தையும் அறிமுகம் செய்ய உள்ளதாக அந்த பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இம்மாதம் 1ம் தேதி முதல், ஜிஎஸ்டி வரி நாடெங்கும் நடைமுறைபடுத்தப்பட்டது. இதை பலர் எதிர்த்தனர், சிலர் அதை ஏற்றுக்கொண்டனர். அதேபோல், சைபர் குற்றங்களும் அதிகரித்துள்ளது. ஆகவே, இளைஞர்களுக்கு இவற்றை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, புதுதில்லி பல்கலைக்கழகம் ஜிஎஸ்டி குறித்த டிப்ளமோ படிப்பையும் சைபர் சட்டம் பாடத்தையும் அறிமுகம் செய்யவுள்ளது.

ஜிஎஸ்டி குறித்த பாடத்தை வணிகவியல் துறையிலும் சைபர் சட்டங்கள் குறித்த பாடத்தை முதுநிலை டிப்ளமோ படிப்பிலும் சேர்க்க கல்வி குழு ஒருமனதாக ஒப்புதல் வழங்கியுள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் ஜூலை 1ம் தேதி அறிவிக்கப்பட்ட ஜிஎஸ்டி குறித்து மாணவர்கள் அதிக ஆர்வமுள்ளவர்களாக இருக்கிறார்கள். அறிவியல் பாடத்தை படிக்கும் 1௦௦ மாணவர்கள் சைபர் சட்டம் குறித்து படிப்பார்கள் என்று மற்றொரு அதிகாரி தெரிவித்தார்.

புதுதில்லியின் மற்ற கல்லூரி அதிகாரிகளும் இந்தியாவின் முதன்மை கல்லூரி அதிகாரிகளும் இந்த பாட திட்டங்களை வரவேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க