• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜல்லிக்கட்டு போராட்டங்களை முன்நின்று நடத்திய நடிகர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுவர் -நீதிபதி ராஜேஸ்வரன்

February 2, 2018 தண்டோரா குழு

ஜல்லிக்கட்டு போராட்டங்களை முன்நின்று நடத்திய நடிகர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுவர் என  ஜல்லிக்கட்டு விசாரணை ஆணைய நீதிபதி ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கோவையில் ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டத்தின் இறுதிகட்டத்தில் நடந்த கலவரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. கோவையில் இரண்டாம் கட்டமாகப், மூன்றாவது நாளான இன்றும் விசாரணை நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

கோவையில் 20 பேருக்கு சம்மன் அனுப்பியதில் 12 பேரிடம் விசாரணை நடந்துள்ளதாகவும் , ஜல்லிகட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட சிவசேனாதபதி,ஹிப் ஆப் தமிழா ஆகியோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட இருப்பதாகவும் கூறினார்.

மேலும் , தமிழகம் முழுவதும் ஜல்லிகட்டு போராட்டத்தின் போது முன்நின்று நடத்திய, வாக்குறுதிகள் கொடுத்த  சினிமா நடிகர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட இருக்கின்றனர். கலவரத்தின் போது சென்னையில் குடிசைகளுக்கு  தீ வைக்கும் பெண் காவலர் யார் என்றே தெரியவில்லை என காவல் துறை அதிகாரிகள் விசாரணை ஆணையத்தில் தெரிவிப்பதாக கூறினார்.

கலவரத்தின் போது தாக்குதல்களிலும் , தவறான செயல்களிலும் ஈடுபட்ட காவலர்களை , காவல்துறையின் உயர் அதிகாரிகள் மறைப்பது போல் தெரிகிறதே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தனக்கும் அவ்வாறு தான் தோன்றுவதாக ராஜேஸ்வரன் கூறினார்.

மேலும் படிக்க