• Download mobile app
30 May 2026, SaturdayEdition - 3762
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சோனியா காந்தி சிகிச்சைக்காக வெளிநாடு பயணம்

March 10, 2017 தண்டோரா குழு

உடல்நலக் குறைவு காரணமாக அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மருத்துவ சோதனைக்காக வெளிநாடு பயணமானார். ஐந்து மாநிலங்களில் நடந்த தேர்தலின் முடிவுகள் வெளியாகும்போது அவர் இந்தியாவில் இருக்க மாட்டார்.

2௦11ம் ஆண்டு வெளியே தெரிவிக்கப்படாத நோய்க்கான சிகிச்சை பெறுவதற்காக வெளிநாடு பயணமானார். அதைத் தொடர்ந்து, அவ்வாறு அடிக்கடி அவர் வெளிநாட்டுக்குப் பயணமாவது வழக்கம்.

2௦16ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வாராணசியில் நடைபெற்ற ஒரு பேரணியின்போது அவரது உடல் நலம் குன்றியது. அங்கிருந்து தில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்போது, உத்தரப் பிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப் மற்றும் உத்தரா கண்ட் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் அவர் பங்கேற்கவில்லை.

“சோனியா காந்தி வெளிநாடு செல்லும் முன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் அவருடைய மகனும் அதன் துணைத் தலைவருமான ராகுல் காந்தியுடனும் ஆலோசனை நடத்தியுள்ளார். அவர் இல்லாத நாட்களில், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் ஏற்று கட்சியை வழிநடத்துவார். சோனியா காந்தி 2 அல்லது 3 நாட்கள் சிகிச்சை முடிந்து இந்தியா திரும்புவார்” என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க