• Download mobile app
17 Jun 2026, WednesdayEdition - 3780
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

செப்.6 முதல் அசல் ஓட்டுனர் உரிமம் கட்டாயம் – உயர்நீதிமன்றம்

September 4, 2017 தண்டோரா குழு

செப்.6 முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

செப்டம்பர் 1-ம் தேதி முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்திருந்தது. அசல் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு 3 மாத சிறை தண்டனை, அல்லது ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்ப்பு தெரிவித்து லாரி உரிமையாளர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்தனர்.

அவ்வழக்கில் செப்டம்பர் 5-ம் தேதி வரை அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டாயமல்ல என உயர்நீதிமன்றம் கூறியிருந்தது.

மேலும் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும் எனவும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதையடுத்து செப்டம்பர் 4-ம் தேதிக்கு அவ்வழக்கை ஒத்திவைத்தது.

இந்நிலையில், இன்று மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது , அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயமல்ல என்ற உத்தரவுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், புதன்கிழமை முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டாயம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.இதனைத்தொடர்ந்து வழக்கின் விசாரணையை வரும் வெள்ளிக்கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க