• Download mobile app
14 Oct 2026, WednesdayEdition - 3899
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்

June 28, 2017 தண்டோரா குழு

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 6 நீதிபதிகள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

நீதிபதிகள் சுவாமிநாதன், ஜெகதீஸ் சந்திரா, பவானி சுப்பராயன், தண்டபாணி, அப்துல் குத்தூஸ், ஆதிகேசவலு ஆகியோர் புதிய நீதிபதிகளாக இன்று பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்த கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தால் பரிசீலிக்கப்பட்டு ஒரு சிலரின் பெயர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பட்டன.இதனையடுத்து ஜனாதிபதி அவர்களுக்கு ஒப்புதல் அளித்து ஆணை பிறப்பித்திருந்தார். அதன் அடிப்படையில் இந்த புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்தம் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. இதில் தற்போது 48 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.தற்போது 6 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 54ஆக உயர்ந்துள்ளது.

மேலும் படிக்க