• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிறையில் சசிகலா சொகுசு வாழ்க்கை ஆதாரம் வெளியானது

July 17, 2017 தண்டோரா குழு

பெங்களூரு சிறையில் சசிகலா சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தொடர்பான வீடியோ ஆதாரம் வெளியானது.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் சசிகலாவிற்கென சிறப்பு சலுகைகள் வழங்கபட்டதாக டிஐஜி ரூபா குற்றம் சாட்டியிருந்தார். இதற்காக டிஜிபி சத்ய நாராயண ராவ் 2கோடி லஞ்சம் பெற்றதாகவும் கூறியிருந்தார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில் இன்று டிஐஜி ரூபா பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தது டிஐஜி ஆய்வில் அம்பலம் ஆகியுள்ளது. இது தொடர்பான வீடியோ ஆதாரமும் வெளியாகியுள்ளது. இதன்படி சசிகாலவிற்கு என ஒதுக்கப்பட்ட பகுதியில் 5 அறையில் இருந்தது.

அதன்படி சமையல் அறை , படுக்கையறை, தனி குளியல் அறை, யோகா செய்ய தனி அறை, யோகமேட் மற்றும் சமையல் தளவாடச்சமான்கள் இருந்துள்ளன. மேலும் டிவி பார்ப்பதற்கு தனி அறையும், யாரும் உள்ளே நுழைய முடியாத அளவிற்கு தடுப்பு சுவரும் வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க