• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சாலையோர வியாபாரிகள் ரூ.10 ஆயிரம் வங்கி கடன் பெற விண்ணப்பிக்கலாம்

July 18, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறியிருப்பதாவது:

கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளின் தொழில் மேம்பாட்டிற்காக வங்கிக்கடன் வழங்கும் திட்டம் ஒன்றிய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதிகளில் தினசரி மார்க்கெட், வாரச்சந்தை, பூங்கா, ரயில் நிலையம், பேருந்து நிலையம், கோவில் சுற்றுப்பகுதி மற்றும் கடை வீதி பகுதிகளில் வியாபாரம் செய்யும் சாலையோர வியாபாரிகளுக்கென பிரத்யேகமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் முதற்கட்டமாக வங்கிகள் மூலம் மாதத்தவணை ரூ.946 வீதம் 12 மாதங்களுக்கு திருப்பிச்செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் ரூ.10 ஆயிரம் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை 9550 சாலையோர வியாபாரிகள் பயன் பெற்றுள்ளனர். தகுதியுள்ள நபர்கள் தங்களது ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் போன்ற ஆவணங்களுடன் மாநகராட்சி பிரதான அலுவலகம் மற்றும் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் இதற்கென அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் வார நாட்களான திங்கள் முதல் சனிக்கிழமை வரை வரும் 16ம் தேதி (இன்று) முதல் அடுத்த மாதம் 31ம் தேதி வரை நடைபெறுகிறது.

மேலும் விபரங்களுக்கு சாலையோர வியாபாரிகளுக்கான கடனுதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுந்தரம் அலைபேசி எண்- 99449 48878 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஏற்கனவே ரூ.10 ஆயிரம் கடன் பெற்று முறையாக திருப்பி செலுத்தி முடித்தவர்கள் ரூ.20 ஆயிரம் கடனுதவி வங்கிகள் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் படிக்க