• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சமூக வலைதளத்தை கலக்கும் ’10 இயர் சேலஞ்ச் !

January 18, 2019 தண்டோரா குழு

சமூக வலைதளங்களில் ’10 இயர் சேலஞ்ச்’ என்ற ஹேஸ்டேக்கை நெட்டிசன்கள் டிரெண்ட் ஆக்கியுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சேலஞ்ச் என்ற பெயரில் பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள் கலந்துக் கொண்டு ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்கள். அந்தவகையில் சமீபத்தில் ஐஸ் பக்கெட் சேலஞ்ச், தோசை சேலஞ்ச், கிகி சேலஞ்ச், நில்லு நில்லு சேலஞ்ச் என்று சமூக வலைத்தளத்தில் பிரபலமானது.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் 10 இயர் சேலஞ்ச் (#10yearchallenge) என்ற ஹேஸ்டேக் பிரபலமாகி வருகிறது. அதன்படி 2009ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தையும், தற்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் இணைத்து பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் தங்கள் நண்பர்களையும் டேக் செய்து அவர்களையும் சேலஞ்சில் பங்கேற்க அழைப்பு விடுத்து வருகின்றனர்.

இந்த 10 இயர் சேலஞ்ச் சாதாரண மக்கள் மட்டுமன்றி சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களின் 10 வருடத்திற்கு முந்தைய போட்டோவுடன் தற்போதைய போட்டோவை சேர்த்து பதிவிட்டு வருகின்றனர். அதைபோல் இதுதொடர்பாக உருவாக்கப்பட்ட மீம்ஸ்களும் அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது.

உலகெங்கிலும் பலரும் இந்த ஹேஸ்டேக்கில் தங்களின் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். தற்போது சமூக வலைதளங்களில் 10 இயர் சேலஞ்ச் (#10yearchallenge) வைரலாகி உள்ளது.

மேலும் படிக்க