December 13, 2025
தண்டோரா குழு
சமூகத்தில் பின்தங்கிய இளைஞர்களுக்கு உதவிடும் வகையில் மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் ஐரோலி பகுதியில் டீப்டெக் பயிற்சி மையத்தை அனுதீப் அறக்கட்டளை மற்றும் டிபிஎஸ் பேங்க் இந்தியா ஆகியவை இணைந்து துவக்கி உள்ளன.
மும்பை, கொல்கத்தா, புனே மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் வசிக்கும் பொருளாதார மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய 2,400 இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து, அவர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை அமைத்திடும் வகையில் தங்களது மூன்றாண்டு திட்டத்தின் முதல் முயற்சியாக இந்த மையத்தை அனுதீப் அறக்கட்டளை மற்றும் டிபிஎஸ் பேங்க் இந்தியா ஆகியவை இணைந்து திறந்துள்ளன.
இந்த நிகழ்ச்சியில் அனுதீப் அறக்கட்டளை உறுப்பினர்களும், டிபிஎஸ் பேங்க் இந்தியா ஊழியர்களும் கலந்து கொண்டு இந்த திட்டத்தில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு வழிகாட்டுதலை வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தினார்கள்.டிபிஎஸ் பேங்க் இந்தியாவின் குழும மூலோபாய சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்புத் துறையின் செயல் இயக்குனர் நெக்சாத் வகில் கூறுகையில், ஐரோலியில் டீப்டெக் பயிற்சி மையத்தை அனுதீப் அறக்கட்டளையுடன் இணைந்து துவக்கி இருப்பது என்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது இந்தத் திட்டத்தின் நோக்கம், பொருளாதார மேம்பாட்டிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் விதமாக குறைந்தபட்சம் 70 சதவீத வேலைவாய்ப்பை ஏற்படுத்தி, இதன் மூலம் இளைஞர்களுக்கு மாதம் ரூ.22,000 முதல் ரூ.25,000 வரை சம்பளத்திலான வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதாகும்.
டிபிஎஸ் பேங்க் இந்தியாவின் ஆதரவுடன் செயல்படுத்தப்படும் ‘பின்தங்கிய இளைஞர்களுக்கான டீப்டெக் திட்டம்’, நிரலாக்கம் அல்லாத டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், தகவல் தொடர்பு, தொழில் தயார்நிலை மற்றும் மென்திறன்கள் ஆகியவற்றில் தொழில்துறைக்கு ஏற்ற பயிற்சிகளை வழங்கி, இந்தியாவின் தொழில்நுட்பத் துறையில் அதிகரித்து வரும் தேவைகளை பூர்த்தி செய்ய இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு கருவிகள், கேமிபிகேஷன் மற்றும் நவீன கற்றல் மேலாண்மை தொழில்நுட்பம் மூலம் இங்கு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்தத் திட்டம், கற்பவர்களை டிஜிட்டல் பணிக்கு ஏற்ற வகையில் தயார்படுத்தும்.
இந்த நிகழ்ச்சியில் அனுதீப் அறக்கட்டளை உறுப்பினர்களும், டிபிஎஸ் பேங்க் இந்தியா ஊழியர்களும் கலந்து கொண்டு இந்த திட்டத்தில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு வழிகாட்டுதலை வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தினார்கள் என்று தெரிவித்தார்.