• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சமஸ்கிருதத்தை விட தமிழ் பழமையானது என்ற பிரதமரின் கருத்தை வரவேற்கிறேன் – மு.க.ஸ்டாலின்

February 17, 2018 தண்டோரா குழு

சமஸ்கிருதத்தை விட தமிழ் பழமையானது என்ற பிரதமரின் கருத்தை வரவேற்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் டால்கோட்ரா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி சமஸ்கிருதத்தை விட அழகான பழமையான தமிழ் மொழி தனக்கு தெரியாமல் இருப்பது வருத்தமளிக்கிறது என்று கூறினார்.

இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின்

தமிழ்மொழியைப் பற்றி அறிந்து உணர்ந்து அவர் அறிவித்திருக்கும் கருத்து அவருடைய மனசாட்சிக்கு உண்மையெனில், தமிழை மத்திய ஆட்சி மொழியாகவும், உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதேபோல், தாய்மொழியாம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு, சமஸ்கிருதத்திற்கு இணையாக நிதி ஒதுக்கீடு செய்து, உலகப் பொதுமறையாம் திருக்குறளை “தேசிய நூலாக” அறிவிக்க வேண்டுமெனவும் மாண்புமிகு பிரதமர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க