• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சபரிமலைக்கு சென்ற இரு பெண்களும் பாதுகாப்பு கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு

January 17, 2019 தண்டோரா குழு

சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்த 2 பெண்களும் பாதுகாப்பு கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம் என்று கடந்த செப்டம்பர் மாதம் 28-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்கு மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல இடங்களில் சபரிமையில் பெண்கள் நுழைவதற்காக போராட்டங்கள் நடைபெற்றன. சபரிமலையில் சாமி தரிசனத்துக்காக செல்லும் பெண்களை தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்க கேரள போலீசார் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பில் 48 சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு பின்னர் இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்பதாக என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு முடிவு செய்தது. மேலும் வரும் ஜனவரி மாதம் 22-ஆம் நாள் முதல் சீராய்வு மனுக்கள் மீது விசாரணை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர்.

இதற்கிடையில், கேரளாவைச் சேர்ந்த கனகதுர்கா, பிந்து ஆகிய இரு பெண்கள்18 படிகள் ஏறி அதிகாலை 3.45 மணியளவில் தரிசனம் செய்துள்ளனர். இரண்டு பெண்கள் சாமி தரிசனம் செய்தததை அடுத்து நடை அடைக்கப்பட்டு மீண்டும் ஒரு மணிநேர பரிகார பூஜைக்கு பின்னர் கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. இதன் பின்னர் பாதுகாப்பு கருதி, இவர்கள் இருவரும் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளனர். இந்த சூழலில், கடந்த செவ்வாய்க்கிழமை மலப்புரத்தில் உள்ள தனது கணவர் வீட்டுக்கு கனகதுர்கா சென்றார். அப்போது, கனகதுர்காவை அவரது மாமியார் கடுமையாக தாக்கியதாக கூறப்பட்டது. இதில் கனகதுர்கா பலத்த காயம் அடைந்தார். உடனடியாக மருத்துவமனையில் கனகதுர்கா அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், சபரிமலை சன்னிதானம் சென்று வழிபட்ட இரு பெண்களும், தங்களுக்கு பாதுகாப்பு கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.

மேலும் படிக்க