• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சட்டப் பேரவையில் பலத்த பாதுகாப்பு

February 18, 2017 தண்டோரா குழு

சென்னை: தமிழக சட்டப் பேரவை வளாகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி சட்டப்பேரவையில் சனிக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியிருக்கிறார். அதையடுத்து ஒரு வார காலமாக காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் தனியார் சொகுசு விடுதியில் தங்கியுள்ள அ.தி.மு.க. சட்டப் பேரவை உறுப்பினர்கள், தி.மு.க. சட்டப் பேரவை உறுப்பினர்கள், பிற கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் சட்டப் பேரவை வந்தனர்.

தமிழகத்தில் அரசியல் சூழ்நிலை அசாதாரணமாக உள்ளதால் தமிழக சட்டப் பேரவையைச் சுற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சட்டப்பேரவை அமைச்சர்கள், உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் காவல் துறையினர் அறிவிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை, வாகனங்கள் அனைத்தும் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகிறது.

மேலும் படிக்க