• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சசிகலா தொடர்பான வீடியோவை சிறைத்துறை அதிகாரிகள் சிலரே அழித்து விட்டனர் டிஐஜி ரூபா

July 15, 2017 தண்டோரா குழு

சசிகலா தொடர்பான வீடியோ பதிவை சிறைத்துறை அதிகாரிகள் சிலரே அளித்துவிட்டதாக டிஐஜி ரூபா மீண்டும் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் அறையில் தனியாக சமையல் கூடம் அமைத்துக் கொள்ள விதிகளை மீறி அனுமதி அளிக்கப்பட்டதாக,சிறைத்துறை டிஐஜி ரூபா கூறிய புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்காக சிறைத்துறை இயக்குனராக இருக்க கூடிய சத்தியநாராயண ராவ் மற்றும் சில அதிகாரிகள் சசிகலாவிடம் இருந்து 2 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் பெற்றுள்ளதாகவும் ரூபா குற்றம்சாட்டியிருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

ஆனால், இதனை முற்றிலும் மறுத்த டிஜிபி சத்யநாராயண ராவ்,ரூபா சிறைக்குச் செல்லாமலே இதுபோல அவதூறு கிளப்பி உள்ளதாகவும், முடிந்தால் வீடியோவை வெளியிட முடியுமா எனவும் சவால் விடுத்தார்.

இந்நிலையில்,கர்நாடக தலைமைச் செயலாளருக்கு டிஐஜி ரூபா புகார் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், தான் சிறைக்குள் சென்று பார்த்தபோது,எடுத்த வீடியோ யாராலோ அழிக்கப்பட்டுவிட்டது.

“சசிகலா விசேஷ சிகிச்சை பெறுவது, மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் குறித்து நான் வீடியோவில் பதிந்திருந்தேன். நான் என்னுடன் எடுத்துச் சென்றிருந்த ஹேண்டி காம் மூலம் நானே வீடியோ எடுத்தேன். அலுவலகம் வந்ததும் எனது அதிகாரிகளில் ஒருவரிடம் அந்தப் பதிவை பென் டிரைவில் பதியச் சொல்லி கொடுத்தேன்.

ஆனால் என்னிடம் ஹேண்டிகாம் மட்டுமே திருப்பித் தரப்பட்டுள்ளது.அதில் இருந்த வீடியோ காணவில்லை” மேலும்,பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் நடைபெறும் விதிமீறல் தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்படுவதாகவும், பெண்கள் சிறையில் சி.சி.டி.வி கேமராக்கள் 7 மற்றும் 8ல் பதிவான காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் டிஐஜி ரூபா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க