• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சசிகலா, டிடிவி தினகரனின் பேனர்கள் அகற்றம்

April 26, 2017 தண்டோரா குழு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திலிருந்து அ.தி.மு.க., பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் பேனர்கள் அகற்றப்பட்டது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க., இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. ஓ.பி.எஸ், தலைமையில் ஒரு அணியும், எடப்பாடி தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது.

இதனிடையே இரு அணிகளும் இணைய பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. சசிகலா குடும்பத்தை வெளியேற்றி, ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை வைத்தால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ஓ.பி.எஸ் அணி அறிவித்தது.

இந்நிலையில் அ.தி.மு.க, தலைமை அலுவலகத்தில் உள்ள, சசிகலா படங்களை அகற்ற வேண்டும் என ஓ.பி.எஸ் அணியை சார்ந்த மதுசூதனன் நேற்று அறிக்கை விடுத்திருந்தார்.

அதன் அடிப்படையில் இன்று காலை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க, தலைமை அலுவலகத்திலிருந்து சசிகலா மற்றும் தினகரனின் பேனர்கள் அகற்றப்பட்டது. அங்கு ஜெயலலிதா படம் மட்டுமே இடம்பெற்ற புதிய பேனர்கள் வைக்கப்பட்டது.

மேலும் படிக்க