• Download mobile app
20 Oct 2025, MondayEdition - 3540
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

க்ரோமாவில் கனவுகளின் திருவிழா தொடங்குகிறது மின்னணு சாதனங்களில் 35% தள்ளுபடி

September 27, 2025 தண்டோரா குழு

டாடா குழுமத்தின் இந்தியாவின் முன்னணி ஓம்னி-சேனல் எலக்ட்ரானிக்ஸ் விற்பனையாளர் க்ரோமா’கனவுகளின் திருவிழா’ என்று பொருள்படும் தனது வருடாந்திர பண்டிகைக் கால விற்பனை திருவிழாவான’ ‘ஃபெஸ்ட்டிவல் ஆஃப் ட்ரீம்ஸ்’ -ஐ அறிமுகப்படுத்தி இருக்கிறது.

இந்த மாபெரும் தள்ளுபடி விற்பனையானது,பண்டிகைக் கால கொண்டாட்டங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. க்ரோமா வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்கள், டிவிகள், வாஷிங் மெஷின்கள், மடிக்கணினிகள் மற்றும் குளிர்சாதன பெட்டிகளுக்கு வழங்கப்படும் அட்டகாசமான தள்ளுபடி சலுகைகளை க்ரோமா விற்பனை நிலையங்களிலும், ஆன்லைனிலும் பெறலாம்.

மேலும் இச்சலுகைகளுடன் கூடுதலாக கேஷ்பேக் சலுகைகள், மாதாந்திர தவணைத் திட்டங்கள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளையும் பெறமுடியும். சமீபத்திய ஜி.எஸ்.டி திருத்தங்களின் காரணமாக டிவி, ஏர் கண்டிஷனர்களில் கூடுதலாக 10% சேமிப்பும் கிடைக்கிறது. இதனால் வீட்டு உபகரணங்களை மேம்படுத்துவதில் இன்னும் அதிக பலன்களைப் பெறமுடியும். இந்தியாவில் 200-க்கும் மேற்பட்ட நகரங்களில் 560-க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களின் வலுவான செயல்பாடுகளுடன், croma.com மற்றும் டாடா நியு [Tata Neu] மொபைல் செயலியில் விரும்பியவற்றை எளிய முறையில் ஷாப்பிங் செய்யும் வாய்ப்பை க்ரோமா வழங்குகிறது.

இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த தயாரிப்புகளை வாங்கினாலும் சரி அல்லது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு சிந்தனைமிக்க பண்டிகை பரிசுகளைத் தேர்ந்தெடுத்தாலும் சரி, ஈடு இணையற்ற சலுகைகளை எளிதில் பெற முடியும் என்பதை க்ரோமா உறுதி செய்கிறது.

வாடிக்கையாளர்கள் தசரா, தந்தேராஸ், தீபாவளி மற்றும் பாய் தூஜ் பண்டிகைகளை இன்னும் சிறப்பானதாக கொண்டாடும் வகையில் அக்டோபர் 23 வரை பிளாக்பஸ்டர் தள்ளுபடிகள், எக்ஸ்சேஞ்ச் போனஸ்கள், 20% வரை கேஷ்பேக் சலுகைகள் மற்றும் கவர்ச்சிகரமான மாதாந்திர தவணை சலுகைகளை க்ரோமா வழங்குகிறது.

மிக அதிகம் விற்பனையாகும் பிரிவுகளில் க்ரோமா வழங்கும் பண்டிகைக்கால பிளாட் தள்ளுபடிகள்:டிவிகளில் 35% தள்ளுபடி, ஸ்மார்ட்போன்களில் 15% தள்ளுபடி, குளிர்சாதன பெட்டிகளில் 25% தள்ளுபடி, சலவை இயந்திரங்களில் 30% தள்ளுபடி, ஏர் கண்டிஷனர்களில் 35% தள்ளுபடி ,மடிக்கணினிகளில் 20% ,சிறிய வீடு மற்றும் சமையலறை உபகரணங்களில் 35% தள்ளுபடி, இயர்போன்கள்/ஹெட்ஃபோன்களில் 45% தள்ளுபடி, ஹோம் ஆடியோவில் 30% தள்ளுபடி, இன்ஃபினிட்டி ரீடெய்ல் லிமிடெட்டின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “பண்டிகை ஷாப்பிங் என்பது எல்லோருக்கும் எளிமையாகவும், மகிழ்ச்சியாகவும், சிரமமற்றதுமாகவும் இருக்க வேண்டும்.

வாடிக்கையாளர்கள் மிக அதிகம் விரும்பும் தயாரிப்புகளுக்கான பிரிவுகளில் அதிரடியாக நிர்ணயிக்கப்பட்ட தள்ளுபடி சலுகைகளையும், தசரா, தந்தேராஸ், தீபாவளி மற்றும் பாய் தூஜ் போன்ற பண்டிகைத் தினங்களுக்கு சிறப்பு சலுகைகளும் இணைந்து, ஒவ்வொரு இந்திய இல்லங்களிலும் கொண்டாட்டத்தின் கூடுதல் சந்தோஷத்தை அளிக்கும் சலுகைகளை நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

எங்களது கனவுகளின் திருவிழா தள்ளுபடி சலுகைகளின் மூலம், க்ரோமா வாடிக்கையாளர்கள் தங்களது அன்புக்குரியவர்களுடன் முழு மனநிறைவோடு பண்டிகையைக் கொண்டாடுவதை உறுதி செய்வதே எங்கள் குறிக்கோள்.’’ என்றார். சலுகைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிராண்டுகள், வகைகள் மற்றும் பிரிவுகளுக்கு மட்டுமே பொருந்தும்; விற்பனை நிலையம் மற்றும் நகரங்களுக்கேற்ப மாறுபடலாம்.

விதிமுறைகள் & நிபந்தனைகள் பொருந்தும்

மேலும் படிக்க