• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை தனியார் மருத்துவமனையில் நர்சிங் மாணவிக்கு பாலியல் தொந்தரவு மருத்துவர் கைது

February 8, 2018 தண்டோரா குழு

கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சிக்காக வந்த நர்சிங் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவர் ரவீந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
கோவை சிங்காநல்லூர் பகுதியில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான ஏ.ஆர்.ஆர் என்ற மருத்துவமனையில் நர்சிங் பயிற்சி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவியின் புகாரை அடுத்து பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவர் ரவீந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.  

பாலியல் தொந்தரவுக்கு ஆளான நர்சிங் மாணவி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர்.இவர் கடந்த 2 மாதங்களாக கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஏ.ஆர்.ஆர் என்ற மருத்துவமனையில் பயிற்சி நர்ஸாக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில்,கடந்த 5 ஆம் தேதி மாணவிக்கு இரண்டு மயக்க ஊசிகளை செலுத்தி ரவீந்திரன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனையறிந்த உடன் பணிபுரியும் பயிற்சி மாணவிகள்,கோவை உக்கடத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில் பயிற்சி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவர் ரவீந்திரனை இராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் போஸ்கோ சட்டத்தில் நேற்று கைது செய்தனர்.

மேலும்,கைது செய்யப்பட்ட மருத்துவர் ரவீந்திரன் இன்று தனிநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மருத்துவர் ரவீந்தரனுக்கு வரும் 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து கோவை தனிநீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதனையடுத்து ரவீந்தரனை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க