• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணன் மகளிர் கல்லூரியில் முத்தமிழ் மேடை நாடக பயிலரங்கம்

January 4, 2017 தண்டோரா குழு

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறையின் தமிழ் இலக்கியப் பேரவை சார்பில் முத்தமிழ் மேடை நாடக பயிலரங்கம் புதனன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு அக்கல்லூரியின் முதல்வர் முனைவர் கி. சித்ரா தலைமை வகிக்க தமிழ்த் துறை தலைவர் கு. பாக்கியம் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறை பேராசிரியர் முனைவர் ராம்ராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு “நடிப்புக் கலை” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

ராம்ராஜ் பேசுகையில், “தமிழின் தொன்மையான கலை வடிவமான கூத்துக் கலையிலிருந்துதான் இப்போதிருக்கும் நவீன நாடகங்கள் தோன்றின. சங்க கால நாடக வகைகளில் பெண்கள் நடித்து வந்ததனர். ஆனால், இடைக்காலத்தில் ஆண்களே பெண் வேடம் அணிந்து நடித்ததாகவும் கூறினார்.

மேலும், 19ம் நூற்றாண்டிற்குப் பின்னர் தான் பாலாம்பாள், பாலாமணி போன்ற பெண் கலைஞர்கள் நடிக்கத் தொடங்கினர்” என்று கூறினார்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாணவ நாடகக் குழுவினர் சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் எழுதிய “கூந்தல் கனவுகள்” என்ற நாவலை அடிப்படையாகக் கொண்ட நாடகம் அரங்கேற்றப்பட்டது. அந்த நாடகம் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளையும், இல்லத்தரசிகளின் துயரங்களையும் மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. இந்த நாடகத்தை நடத்தி, அதன்மூலம் மாணவியருக்கு நேரடி செயல்முறைப் பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும் படிக்க