• Download mobile app
25 Jul 2026, SaturdayEdition - 3818
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை வ.உ.சி. மைதானத்தில் 22ம் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கும் முதல்வர் முக .ஸ்டாலின் !

November 20, 2021 தண்டோரா குழு

கோவை வ.உ.சி. மைதானத்தில் 22ம் தேதி தமிழக முதலமைச்சர் திட்டப் பணிகளை திறந்து வைத்தும், அடிக்கல் நாட்டியும், நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

கோவை வ.உ.சி. மைதானத்தில் வரும் 22ம் தேதி நடைபெறவுள்ள அரசு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கவுள்ளார்.

முடிவுற்ற திட்டப் பணிகள் :

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், பொதுப்பணித் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வேளாண்மை பொறியியல் துறை, கூட்டுறவுத் துறை, பள்ளிக்கல்வித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆகிய துறைகளின் சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள பல்வேறு திட்டப் பணிகளை முதலமைச்சர் திறந்து வைக்கவுள்ளார்.

அடிக்கல் நாட்டும் திட்டப் பணிகள்:

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், கூட்டுறவுத் துறை ஆகிய துறைகளின் சார்பில் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டவுள்ளார்.

அரசு நலத்திட்ட உதவிகள் : –

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், கூட்டுறவுத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்கவுள்ளார்.

இவ்விழாவில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர் என மாவட்ட கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க