• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

October 29, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 29ம் தேதி (இன்று) முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 10 மணி முதல் அலுவலக வளாகத்தில் நேரிடையாக நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முகாமிற்கு வரும் அனைத்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தங்களது சுயவிவரம் மற்றும் கல்விச் சான்றுகளின் நகல்களுடன் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு பெறலாம். இம்முகாமில் கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை. பலமுன்னணி தனியார் நிறுவனங்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பல்வேறு பணிக்காலியிடங்களுக்கு மனுதாரர்களை தேர்வு செய்யவுள்ளனர்.

இம்முகாமில் தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு பணிநியமன ஆணை அப்போதே வழங்கப்படும். இம்முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இந்த தகவலை ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க