• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை வெள்ளலூர் குளக்கரையில் மியாவாக்கி அடர்வனம் திட்டம் அறிமுகம்

February 5, 2018 தண்டோரா குழு

கோவையில் குளங்களை பாதுகாக்கும் விதமாக குளக்கரைகளில் மியாவாக்கி முறையில் அடர்வனம் உருவாக்கும் முயற்சியில் இயற்கை ஆர்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் விதமாக பல்வேறு அமைப்புகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் பல்வேறு திட்டப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் கோவையில் குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் கோவையை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குளங்களை பாதுகாக்கும் விதமாக பல்வேறு களப்பணிகளை செய்து வருகின்றனர்.

இதில் ஒரு பகுதியாக கோவையை அடுத்த,வெள்ளலூர் குளக்கரையில் மியாவாக்கி முறையில் அடர்வனம் உருவாக்கும் திட்டத்திற்கான துவக்க விழா இன்று(பிப் 5) நடைபெற்றது.இதில் சிறிய அளவிலான இடத்தில் அதிக மரங்களை நட்டு வளர்க்கும் மியாவாக்கி முறையில் மரங்கள் நடப்பட்டன.

இவ்விழாவில்  இயற்கை ஆர்வலர் அன்பரசன் கலந்து கொண்டு மரங்களை நட்டு விழாவை துவக்கி வைத்தார்.மியாவாக்கி் முறையில் பலவகையான மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்படும் எனவும் இதன் மூலம் இந்த அடர்வனங்கள் பலவகை இன பறவைகள் இந்த இடத்திற்கு வர ஏதுவாக அமையும் எனவும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் தெரிவித்தனர்.

மேலும் படிக்க