• Download mobile app
23 Apr 2024, TuesdayEdition - 2995
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளை தாமதமின்றி முடிக்க வேண்டும் இந்திய தொழில் வர்த்தக சபை சார்பில் தீர்மானம் நிறைவேற்றம்

September 21, 2021 தண்டோரா குழு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளையின்,87வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது.வர்த்தக சபை அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார்.துணை தலைவர்கள் ஸ்ரீராமுலு, சுந்தரம், செயலாளர்கள் துரைராஜ், நடராஜன், பொருளாளர் கைலாஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், கோவை விமான நிலையம் விரிவாக்க பணிகள் தொடர்பாக நிலம் கையப்படுத்தும் பணிகளை விரைவுபடுத்தி, விமான நிலைய விரிவாக்க பணிகளை தாமதமின்றி முடிக்க வேண்டும். தேசிய முதலீடு மற்றும் உற்பத்தி மண்டலமாக கோவை மாறினால், தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். வடகோவை, பீளமேடு, போத்தனுார் ஸ்டேஷன்களில் நவீன வசதிகளுடன், கட்டமைப்பை மேம்படுத்துவதுடன், பீளமேடு, இருகூர், சோமனுார் ஸ்டேஷன்களில் பிளாட்பார்ம் விரிவுபடுத்த வேண்டும்.

இன்ஜினியரிங் ஜாப் ஒர்க்குகளுக்கு,‘ஜீரோ’ சதவீதம் ஜி.எஸ்.டி., விதிக்க வேண்டும். தொழில் துறையினரின் குறைகளுக்கு தீர்வுகாண, மண்டல அளவில் தொடர் சந்திப்பு கூட்டங்களை அரசு நடத்த வேண்டும்.

நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அலைச்சலை குறைக்கும் விதமாக ஒற்றை சாளர முறையில் கட்டுமான அங்கீகாரம் வழங்க வேண்டும்.நாடு முழுவதும் ஒரே மாதிரியான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களை செயல்படுத்தினால் பசுமை ஆற்றல் ஊக்குவிக்கப்படும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் படிக்க