• Download mobile app
07 Jun 2026, SundayEdition - 3770
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை வாசவி திருக்கோயிலில் மண்டல பூஜை ஒட்டி நடைபெற்ற மகிழ்வித்து மகிழ் நிகழ்ச்சி

July 21, 2025 தண்டோரா குழு

கோவை வாசவி திருக்கோயிலில் மண்டல பூஜை ஒட்டி நடைபெற்ற மகிழ்வித்து மகிழ் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 50க்கும் மேற்பட்ட விளையாட்டுகளை பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் விளையாடி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

கோவை வைசியாள் வீதி பகுதியில் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது.இதன் கும்பாபிஷேக பெருவிழா மற்றும் மண்டல பூஜை கடந்த 7ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேக விழாக்கு பிறகு தொடர்ந்து 48 நாள் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது.

இந்த 48 நாளும் பல்வேறு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது இதில் பன்னிரண்டாவது நாளான நேற்று ஸ்ரீ ராகு துர்கா சங்கம் சார்பில் மகிழ்வித்து மகிழ் என்ற விளையாட்டு போட்டி ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. கோயிலின் கலையரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 50 வகையான போட்டிகள் மற்றும் இரண்டு மெகா போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு போட்டிகளில் பங்கேற்றனர்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பல்வேறு விதமான பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியை 3 வயது வியானிகா வெங்கடேஷ் துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் ராணி விஜயகுமார், மகேஸ்வரி சுரேஷ்குமார் ஆகியோர் செய்து இருந்தனர்.

மேலும் படிக்க