• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மீன் கடையில் விற்பனைக்கு வந்த 86 கிலோ ராட்சத மீன் !

November 30, 2021 தண்டோரா குழு

கோவையில் உள்ள மீன் கடை ஒன்றில் 86 கிலோ இராட்சத மீன் ஒன்று விற்பனைக்கு வந்தது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் கபீர். இவர் ஒலம்பஸ் சிக்னல் அருகே ‘மிஸ்டர் பிஸ்’ என்ற பெயரில் மீன் கடை நடத்தி வருகிறார்.இவரது கடைக்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்து தினமும் கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் மங்களாபுரம் பகுதி கடலில் நேற்று மீனவர்கள் மீன்பிடிக்க சென்று உள்ளனர். அந்த கடல் பகுதியில் மிகவும் அரிதான மீனான ‘எல்லோ என்ட்யூனா’என்ற 86 கிலோ எடை கொண்ட ராட்சத மீன் பிடிபட்டது.

அந்த மீன் இன்று கோவை ராமநாதபுரத்தில் உள்ள கபீரின் மீன் கடைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை அந்த பகுதி பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

இதுகுறித்து கடை உரிமையாளர் கூறுகையில்,

”இதற்கு முன்பாக 56 கிலோ எடை கொண்ட மீன் விற்பனைக்கு வந்தது. முதல் முறையாக 86 கிலோ எடை கொண்ட ராட்சத மீனை ஏலத்தில் எடுத்து விற்பனைக்காக கொண்டு வந்துள்ளோம். அந்த மீனை சுத்தப்படுத்திய பின்னர் கழிவுகள் நீங்க 50 கிலோ இருக்கும். ஒரு கிலோ ரூ.250 க்கு விற்பனை செய்யப்படுகிறது.” என்றார்.

மேலும் படிக்க