• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகராட்சியின் வரைவு வார்டு, மறு வரையறையில் உள்ள குளறுபடிகளை தீர்க்க வலியுறுத்தி நா.கார்த்திக் எம்எல்ஏ – மாநகராட்சி ஆணையாளரிடம் மனு

January 17, 2018 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி அறிவித்த வரைவு வார்டு மறு வரையறையில் இருக்கும் குளறுபடிகளை நீக்க வலியுறுத்தி திமுக மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜய கார்த்திகேயனிடம் மனு அளித்தார்.
அதில், கோவை மாநகராட்சி பகுதிகளில் வரி விதிக்கப்படாத குடியிருப்புகளில் வசிக்கும் வாக்காளர்களின் நிலையை தெளிவுபடுத்த வேண்டும். மாநகராட்சியில் 70 சதவீத வீடுகளில் ஒரே வரி விதிப்பின் கீழ் சுமார் 3 அல்லது 4 குடியிருப்புகளுக்கு மேலாக வாடகைக்கு விட்டிருக்கிறார்கள். வரி விதிப்பு மட்டும் கணக்கில் எடுக்கும்போது வாக்காளர் பட்டியலில் உள்ள மற்றவர்களின் நிலையை தெளிவுபடுத்த வேண்டும். ஒரு சில வார்டுகளை இரண்டாக பிரித்து, வெவ்வேறு  சட்டமன்ற தொகுதியில் சேர்த்துள்ளனர். இதனால் ஏற்படும் குழப்பங்களை தவிர்க்க, பரிசீலனை செய்தி முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை அடங்கிய மனுவை மாநகராட்சி ஆணையாளரிடத்தில், நா.கார்த்திக் எம்எல்ஏ வழங்கினார்.

மேலும் படிக்க