• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மத்திய சிறையில் மூலிகை தோட்டம் மற்றும் முயல் விற்பனை துவக்கம்

November 16, 2020 தண்டோரா குழு

கோவை மத்திய சிறையில் முயல் விற்பனை மற்றும் மூலிகைத் தோட்டத்தை சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் இன்று துவக்கி வைத்தார்.

கோவை காட்டூர் பகுதியில் மத்திய சிறை வளாகம் உள்ளது. இந்த சிறை வளாகத்தில் அரை ஏக்கர் பரப்பளவிற்கு மூலிகைத் தோட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கற்றாழை உள்ளிட்ட 40 வகையான மூலிகைகளை இந்த அரை ஏக்கர் பரப்பளவில் கைதிகள் பராமரித்து வளர்க்க உள்ளனர். இதன்மூலம் மருந்துகள் தயாரிக்கப்படும் என்று சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் சிறையில் வளர்க்கப்படும் முயல்கள் விற்பனை இன்று துவங்கப்பட்டுள்ளது. அதன்படி இரண்டு முயல் ரூ 500 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் காடை முட்டையும் விற்பனை செய்யப்படுகிறது.சிறைத்துறை நிர்வாகத்தின் இந்த முயற்சி பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

மேலும் படிக்க