• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை தொண்டாமுத்தூரில் ஒற்றை காட்டு யானை தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழப்பு

December 12, 2020 தண்டோரா குழு

கோவை தொண்டாமுத்தூரில் ஒற்றை காட்டு யானை தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழப்பு, மேலும் இருவர் படுகாயமுற்று அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை தொண்டாமுத்தூர் மேல்நிலைப்பள்ளி எதிரில் அமைந்துள்ள வஞ்சியம்மன் தெருவில் இன்று காலை ஒற்றை காட்டு யானை ஒன்று புகுந்தது அப்போது வெளியே வந்த 75 வயதான முதியவர் ஆறுமுகத்தை காட்டு யானை தாக்கியதில் அவருக்கு தலையில் படுகாயமுற்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அதே பகுதியில் நின்றுகொண்டிருந்த ஆறுச்சாமி மற்றும் முத்து ஆகிய இருவரையும் காட்டு யானை தாக்கியது இதில் அவர்கள் படுகாயமுற்று கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில் வனத்துறையினர் சம்பவ இடத்தில் அப்பகுதி மக்களிடையே விசாரணை மேற்கொண்டனர். கடந்த 20 நாட்களுக்கு முன்னர் குப்பேபாளையம் பகுதியில் இயற்கை உபாதை கழிக்க சென்ற இரு மூதாட்டிகள் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது வனத் துறையினர் உடனடியாக காட்டு யானை நடமாட்டத்தை கட்டுப்படுத்தி உயிரிழப்புகளை தவிர்க்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்தில் தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் உயிரிழந்த ஆறுமுகத்தின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்ததோடு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணியிடம் தகவல் தெரிவித்திருப்பதாகவும் அவர் உரிய நிவாரணம் அளிக்கப்பதோடு யானை நடமாட்டத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருப்பதாக தெரிவித்தனர். உறுதி அளித்தது பேரில் சமரசம் ஆகிய அப்பகுதி மக்கள் உயிரிழந்து ஆறுமுகத்தின் உடலை எடுத்துச் செல்ல அனுமதித்தனர். இது தொடர்பாக தொண்டாமுத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க