• Download mobile app
23 Jul 2026, ThursdayEdition - 3816
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு நினைவு அஞ்சலி

February 14, 2023 தண்டோரா குழு

1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 58 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் நிகழ்ந்து 25 ஆண்டுகள் ஆகிறது. வருடம் தோறும் பிப்ரவரி 14-ஆம் தேதி குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

அதன்படி இந்த ஆண்டும் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது.அதன் ஒரு பகுதியாக பேரூர் படித்துறையில் விஷ்வ ஹிந்து பரிஷத் பஜ்ரங்தள் சார்பில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு 25ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் உயிரிழந்தவர்களின் பெயர்களை சொல்லி திதி கொடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இந்த அமைப்பை சேர்ந்த சிவலிங்கம் கோட்டச் செயலாளர் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் ரவிந்திரன் மாத்ரு சக்தி இணை அமைப்பாளர் கௌசல்யா விக்னேஷ் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெள்ளிங்கிரி செல்வபுரம் பிரகண்டச் செயலாளர் திருப்பதி ராம் நகர் செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க