• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை சிங்காநல்லூரில் கழுத்தில் கத்தியை வைத்து பணம் பறித்த இரண்டு வழிப்பறிக் கொள்ளையர்கள் கைது

February 11, 2019 தண்டோரா குழு

கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே கழுத்தில் கத்தியை வைத்து பணம் பறித்த இரண்டு வழிப்பறிக் கொள்ளையர்களைப் சிங்காநல்லூர் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த முருகேசனின் மகன் வெங்கடேசன் 35. இவர் சென்னையில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் நேர்முகத்தேர்வுக்காக வந்துள்ளார்.பின்னர் நேர்முகத்தேர்வு முடிந்து நேற்று மீண்டும் சொந்த ஊருக்கு செல்ல சிங்காநல்லூர் பேருந்து நிலையம் சென்றுள்ளார்.அப்போது இரவு சுமார் 11 மணியளவில் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அம்மா உணவகத்தின் முன் சென்று கொண்டிருந்தபோது வெங்கடேசனை அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டி கையில் இருக்கும் பணத்தை கேட்டுள்ளனர். ஆனால் அவரிடம் 200 ரூபாய் மட்டுமே இருந்தது. இதையடுத்து வழிப்பறிக் கொள்ளையர்கள் அவரிடம் இருந்த பணத்தை பிடுங்கி தப்பி சென்றனர்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட வெங்கடேசன் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விரைந்து சென்ற ஆய்வாளர் ஆனந்த் மற்றும் உதவி ஆய்வாளர் அர்ஜூன் தலைமையிலான காவலர்கள் சிங்காநல்லூர் பகுதியை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதேபோல வழிப்பறி கொள்ளையில் ஈடுபடும் குற்றவாளிகள் குறித்தும் விரைவாக தகவல்களை திரட்டி குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் சந்தேகத்துக்கிடமாக சிங்காநல்லூர் ரயில் நிலையம் அருகே சுற்றித்திரிந்த இருவரை விசாரித்த பொழுது இவர்கள் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இவர்களை கைது செய்து விசாரணை செய்ததில் இவர்கள் எஸ் ஐ எச் எஸ் காலனி பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமானின் மகன் அப்பாஸ் 19,மற்றும் முத்துசாமியின் மகன் அசோக் 23 , என்பதும் தெரியவந்தது. இதையடுத்து சிங்காநல்லூர் போலீசார் அவர்கள் பயன்படுத்திய கத்தியை கைப்பற்றி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க