• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை குண்டு வெடிப்பில் மரணமடைந்தவர்களுக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

February 5, 2018 தண்டோரா குழு

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் குண்டு வெடிப்பில்  மரணமடைந்தவர்களுக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி பாரத் சேனாவினர்  நினைவுத்தூனோடு வந்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இன்று(பிப் 5) மனு அளித்தனர்.

கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு நடந்த  குண்டு வெடிப்பில் 58க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.இந்த குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு ஆர் எஸ் புரம் பகுதியில் வருடந்தோறும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

மேலும், இறந்தவர்களின் நினைவாக அப்பகுதியில் நினைவுத்தூண் அமைக்கக்கோரி பல வருடங்களாக மனு கொடுத்தும் இதுவரை உரிய பதில் அளிக்காமல் மாவட்ட நிர்வாகம் அலட்சியப்படுத்துவதாக குற்றம் சாட்டினர்.

இந்நிலையில்,பாரத் சேனா அமைப்பினர் நினைவுத்தூணை தூக்கியவாறு,இந்த ஆண்டு இறுதிக்குள் நினைவுத்தூண் அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தனர்.

 

மேலும் படிக்க