October 3, 2025
தண்டோரா குழு
வனவிலங்குகள் மற்றும் இயற்கை வாழிடங்களைப் பாதுகாக்கும் விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கில், தேசிய வனவிலங்கு வாரம் ஒவ்வொரு ஆண்டும் அக்.2 ம் தேதி முதல் 8ம் தேதி வரை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு,கோவை அருகிலுள்ள ஆனைக்கட்டி பகுதியில் அமைந்துள்ள நீலகிரி உயிர்கோளம் இயற்கை பூங்காவில்,
தேசிய வனவிலங்கு வார விழா கொண்டாடப்பட்டது.விழாவின் ஒரு பகுதியாக, பறவைகளை பார்வையிடுதல், வனவிலங்கு புகைப்படப் போட்டி, வனவிலங்கு புகைப்படம் தொடர்பான பயிலரங்கம் நடைபெற்றது.
இதில் பிரபல புகைப்படக் கலைஞர் ஹரிஷ் வெங்கட்ராமன் புகைப்படக்கலை முறைகள், நெறிமுறைகள் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வில் புகைப்படங்களின் பங்கு குறித்து எடுத்துரைத்தார். தொடர்ந்து சிறந்த புகைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
நீலகிரி உயிர்க்கோளம் இயற்கை பூங்காவனது,தாவரங்கள்,விலங்குகளின் வாழும் களஞ்சியமாகவும்,சுற்றுச்சூழல் கல்வி,ஆய்வு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை குறித்த பொது விழிப்புணர்வை மேம்படுத்தும் மையமாகவும் செயல்படுகிறது.