• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை  அரசு பள்ளி ஆசிரியர் குடும்பத்துடன் தற்கொலை ஒரே குடும்பத்தில் ஐந்து பேர் உயிரிழப்பு

January 19, 2019

கோவையில் அரசு பள்ளி ஆசிரியர் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார் . இதனால் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்து உள்ளனர்.

கருமத்தம்பட்டியில் அரசு பள்ளி ஆசிரியர் அந்தோணி ஆரோக்கிய தாஸ் என்பவர் இன்று குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டு உள்ளார். அதில் தாய் புவனேஸ்வரி, மனைவி ஷோபனா, 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தற்கொலை செய்து உள்ளார். இதையடுத்து,உயிரிழந்த 5 பேரின் உடல்களை கைப்பற்றி கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்தோணி ஆரோக்கிய தாஸ் திருப்பூர் மாவட்டம் கூலிபாளையம் அரசு பள்ளியில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தற்கொலை செய்ததற்கான காரணத்தை எழுதி வைத்து உள்ளார்.

அக்கடித்தில், கடுமையான முதுகு வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், இதனால் வலியால் துடித்து வந்ததால் உயிர் வாழ விருப்பமில்லை எனவும் குடும்பத்தை விட்டு செல்ல மனமின்றி அவர்களையும் கூட்டிக்கொண்டு செல்வதாகவும் எழுதியுள்ளார். எனவே தங்களது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை எனவும் அதில் கூறியுள்ளார்.

மேலும் படிக்க